உலகம்

‘முழுமையான இந்திய வரைபடம்’ – பாக்., சீனாவை மூக்குடைத்ததா அமெரிக்கா?

இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக பகிர்ந்த எக்ஸ் பதிவில் இடம்பெற்றிருந்த ‘முழுமையான இந்தியா’ வரைபடம் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

வர்த்தக உலகில் இந்த ஒப்பந்தத்தை ஒட்டி பல்வேறு கருத்துகள் ஒருபுறம் வெளியாகி வரும் சூழலில், கூட்டறிக்கை குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இந்திய வரைபடம் மறுபுறம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்தப் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) என்று அறியப்படும் ஜம்முவின் வடக்கு பகுதி, தனது எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோரிவரும் அக்‌ஷய் சின் (Aksai Chin) ஆகியனவற்றை அந்த இந்திய வரைபடம் உள்ளடக்கியுள்ளது. இது இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றமா?

காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதுதான் இந்தியாவின் வாதம். அதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் ஆக்கிரமிப்புகளை வரைபடங்களில் கூட இந்தியா ஏற்றதில்லை. இதற்கு முன்னர் அமெரிக்கா, இந்தியா தொடர்பான வரைபடங்களைப் பயன்படுத்துகையில் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டிருந்தால், கண்டிக்கத் தவறியதில்லை.

இந்நிலையில், இந்திய – அமெரிக்க வர்த்த ஒப்பந்தத்தை விளக்கும் கிராஃபிக்கல் ரெப்ரசன்டேஷன்களில் இந்தியாவின் வரைபடம் இந்தியா விரும்பும்படி அமைந்துள்ளது.

ஒருவேளை இந்த முறை அமெரிக்கா தெரிந்தே இந்த வரைபடத்தைப் பயன்படுத்தி இருக்குமேயானால், இது இந்திய நிலைப்பாட்டில் அமெரிக்கா ஒத்துப்போகிறது என்பதை தெளிவாக பாகிஸ்தான், சீனாவுக்கு உணர்த்தும் சமிக்ஞை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு நோபல் பரிசுக்கு பரிந்​துரை, அமைதி வாரி​யத்​துக்கு ஆதரவு என பாகிஸ்​தான் பல்​வேறு முயற்​சிகளை மேற்கொண்ட போதிலும், வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்தியாவை விட கூடுதல் வரிச்​சுமை​யையே அந்த நாடு பெற்​றுள்​ளது.

இந்த விவ​காரத்தை தற்​போது கையில் எடுத்​துள்ள நெட்டிசன்கள், பாகிஸ்​தான் அரசை கடுமை​யாக விமர்சித்து வரு​கின்​றனர். இப்போது அதில் இந்த வரைபட விவகாரமும் இணைந்து கொண்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *