உலகம்

ஒபாமாக்களை விலங்குகளாக சித்தரிக்கும் இனவெறுப்பு காணொளியை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் (Michelle ) ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்ற சமூக ஊடக காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய 62 விநாடி காணொளியின் இறுதியில் இந்த காணொளி இடம்பெற்றிருந்தது.

பிரபலமான “தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட் ”(The Lion Sleeps Tonight) பாடலுடன் அந்தக் காணொளி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த காணொளிக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் “வெள்ளை மாளிகையில் நான் பார்த்த மிக மோசமான இனவெறுப்பு செயல்” என கருப்பினத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட், கண்டித்தார்.

இந்த காணொளியில் ஒபாமாக்கள் மட்டுமல்லாமல், ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன், அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சி தலைவர்களும் விலங்குகளாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் வெள்ளை மாளிகை, இந்தக் காணொளியை ஒரு “இணைய மீம்” எனக் கூறி ஆதரித்தது. ஆனால், பல குடியரசுக் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த காணொளி ட்ரம்பின் Truth Social இல் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த காணொளியை தான் முழுமையாக பார்க்கவில்லை என்றும், ஒபாமாக்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதை அறியாமல் ஊழியர் ஒருவர் அதனை பதிவிட்டதாகவும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *