நிகழ்வுகள்

சிறப்பாக இடம்பெற்ற மாணவர்களின் மரதன் ஓட்ட போட்டி

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட குமுழமுனை மகா வித்தியாலய மாணவர்களின் 2026 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்று (06.02.2026) காலை பாடசாலையின் முதல்வர் டொன்பொஸ்கோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

ஆண்களுக்கான மரதனோட்ட போட்டி முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் இருந்து குமுழமுனை மகா வித்தியாலயம் வரையும், பெண்களுக்கான மரதனோட்ட போட்டி அளம்பில் சந்தியிலிருந்து குமுழமுனை மகாவித்தியாலயம் வரையும் இடம்பெற்ற மரதனோட்ட போட்டியில் பாடசாலையின் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களையும் பெற்ற வீரர்களுக்கு வெற்றி கேடயங்களும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், மரதனோட்டத்தினை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்

தேசிய மரதனோட்ட வீரரான கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதனின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற குறித்த மரதனோட்ட நிகழ்வில் சிறப்பு அதிதியாக முன்னாள் ஓய்வு நிலை அதிபர் சு.கிருஸ்ணகுமார், முல்லைத்தீவு மாவட்ட உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.டிலான், பாடசாலையின் முதல்வர் ஜெ.டொன்பொஸ்கோ , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் , ஐக்கிய விளையாட்டு கழகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *