நிகழ்வுகள்
கிளிவெட்டி ம.வி.யில் தைப்பொங்கல் விழா

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்றது.
இதன்போது மூதூர் கல்வி வலயத்தின் 23 பாடசாலைகளினால் 23 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெற்றதுடன் விதவிதமான கோலங்களும் போடப்பட்டிருந்தன.அத்தோடு பொங்கல் பூஜைகளும் இடம்பெற்றன.
விசேட அம்சமாக பாடலொன்றுக்கு 50 மாணவிகளின் ஒரே நேரத்தில் நடனமாடினர்.
இந்நிகழ்வில் கோலாட்டம்,தமிழர் கலாசார நடனங்கள்,இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள்,உதவி கல்வி பணிப்பாளர்கள் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ,சர்வமத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்களும் பொங்கலில் பங்குபற்றியிருந்தனர்.

![]()