இலங்கை

இலங்கை மீனவர்களைத் தாக்கியது அரசின் குழுவா?; சிங்களம்,தமிழ் பேசுபவர்கள் இருந்ததாகக் கூறும் நாமல்

அரசாங்கத்தின் ஊடாக போசனையடையும் குற்றக் கும்பல்கள்தான் மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனவா? என்ற சந்தேகங்கள் எழுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்புக்குள் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எமது மீனவர்கள் மீது எமது கடல் எல்லைக்குள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியா அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதாவது குறித்த தாக்குதலில் இந்திய கடற்படையினரோ அல்லது கரையோர பாதுகாப்பு பிரிவோ சம்பந்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட கும்பலிடயே சிங்களம் மற்றும் தமிழ் பேசுபவர்கள் இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உங்களுடைய அரசாங்கத்தில் வளர்க்கப்படும் திட்டமிட்ட குற்றவாளிகள் இந்த மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனரா? என்ற பிரச்சினைகள் உள்ளன. இந்த அரசாங்கத்தினால் போசனையடையும் திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் உள்ளன. மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *