பலதும் பத்தும்

ட்ரூடோ கேற்றி பெர்ரி ஜோடி தொடர்பில் வெளியாகிவரும் போலி புகைப்படங்கள்

கனடா முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது புதிய காதலியான பிரபல அமெரிக்கப் பாடகி கேற்றி பெர்ரி ஜோடியின் புகைப்படங்கள் சமீபத்தில் சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகின.

அந்த புகைப்படங்கள் வெளியானாலும் ஆகின, ஒரு நிகழ்ச்சி விடாமல் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக பங்கேற்பதுபோல் ஒரு தோற்றம் முன்வைக்கப்பட்டுவருகிறது. 

ட்ரூடோ கேற்றி பெர்ரி ஜோடி தொடர்பில் வெளியாகிவரும் போலி புகைப்படங்கள் | Trudeau Katy Perry Grammy Photo Is Fake

சமீபத்தில், இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரூடோவும் பெர்ரியும் கலந்துகொண்டதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகின.

இருவரும் மேட்சிங்காக கருப்பு நிற உடை அணிந்து ஜோடியாக நிற்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

விடயம் என்னவென்றால், ட்ரூடோவுக்கும் கிராமி விருதுக்கும் சம்பந்தமே கிடையாது. அதேபோல, பெர்ரி ஒரு பாடகிதான் என்றாலும் அவரது பெயர் எந்த பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்படவும் இல்லை, அவர் நிகழ்ச்சியில் பாடல் எதையும் பாடவும் இல்லை. 

ட்ரூடோ கேற்றி பெர்ரி ஜோடி தொடர்பில் வெளியாகிவரும் போலி புகைப்படங்கள் | Trudeau Katy Perry Grammy Photo Is Fake

அப்படியானால், இந்த ஜோடி எதற்காக கிராமி விருதுகள் வழங்கும் விழாவுக்குச் சென்றது என்று கேட்டால், அவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. 

அதாவது, எல்லாம் இந்த AI புகைப்படங்கள் உருவாக்குபவர்களின் கைவண்ணம்தான்.

ஆம், செயற்கை நுண்ணறிவு மூலம் இப்படி ட்ரூடோவும், பெர்ரியும் கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்றதுபோல் புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் சிலர்.

வேடிக்கை என்னவென்றால், சமீபத்தில், ட்ரூடோ போல் டான்சிங் என்னும் நடனம் ஆடுவது போலக் கூட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *