இலங்கை

பாதிரியாரைத் தாக்கினால் கைது; பிக்குகளை தாக்கினால் எதுவுமில்லை திருமலையில் கொதித்த கம்மன்பில

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலை தொடர்பான வழக்கில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை சர்ச்சைக்குரியது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், “வழக்கின் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையில் காவல்துறையினரை பிக்குகள் தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர் பிக்குகளை தாக்கியதை முழு நாடுமே பார்த்தது. விகாரைக்கு வந்தது காவல்துறையினர், முத்துக்குடை உடையும் வரை தாக்கியவர்கள் காவல்துறையினர்.ஆனால் அநீதியாக அசாதாரணமாக பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததால் அனைத்து குற்றவாளிகளும் தாங்கள் நிரபராதிகள் என தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்திலேயே காவல்துறையினர் செயற்படுகின்றனர்.

கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக செய்த முறைப்பாட்டில் ஆறு காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், பிக்குகள் செய்த முறைப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *