இலங்கை

விசாரணைக்குச் செல்லாத சிராந்தி; இரு வார அவகாசம் கோருகிறார் 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷவை பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கு ஆஜராவதற்கு இரண்டுவார கால அவகாசத்தை கோரியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணியளவில் அவரை கொழும்பிலுள்ள பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் சார்பாக அங்கு சென்ற அவரின் சட்டத்தரணி சிராந்தி ராஜபக்‌ஷவுக்கு தனிப்பட்ட காரணங்களால் வருகை தரமுடியவில்லை என்றும், இதற்காக இரண்டு வார கால அவகாசத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் ‘சிரிலிய’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *