இலங்கை

நாமல் இந்தியா சென்ற நிலையில் 9.30 க்கு வருமாறு 9.50 க்கு சி.ஐ.டி.யினர் அழைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிக விசாரணைகள் பிரிவில் ஆஜராகுமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த கடிதம் நேற்றைய தினம் முற்பகல் 9.50 மணியளவிலேயே தங்காலை கால்டன் இல்லத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது நாமல் ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு பயணிமாகியிருந்தார் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சாகர காரியவசம் மேலும் கூறுகையில்,

நாமல் ராஜபக்‌ஷ இந்திய குடியரசு தினம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்த பின்னரே அவர் இந்தியா பயணமாகியுள்ளார்.

இந்நிலையில் 26ஆம் திகதி காலை 9.50 மணியளவில் தங்காலை கால்டன் வீட்டுக்கு வந்த பொலிஸ் அதிகாரியொருவர் சீஐடியில் உள்ள வணிக விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு கடிதமொன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *