உலகம்

ஆஸ்திரேலிய தினத்தன்று பிரதான நகரங்களில் போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள்
Invasion Day என அழைக்கப்படும் போராட்டப் பேரணிகளில் பங்கேற்றனர்.

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எனினும், ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களின் நில உரிமை பறிக்கப்பட்ட
நாளாக பலரும் இந்நாளை கருதுகின்றனர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் பேரணிகள்
நடத்தப்பட்டன.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் விதிக்கப்பட்டிருந்த
சில போராட்டத் தடைகளில் தளர்வு வழங்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ்
காவல்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் சிட்னியின் சில பகுதிகளில் பேரணிகள் நடத்த அனுமதி
வழங்கப்பட்டது.

சிட்னியின் ஹைட் பார்க் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் பூர்வீக
மக்களின் இறையாண்மையை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய தின நிகழ்வுகளும் மிகவும்
சிறப்பாக நடைபெற்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *