இலங்கை

அமைச்சர் லால்காந்தவின் முகத்திலே குத்துவேன்; சாமர சம்பத் எம்.பி. கூறுகிறார் 

அமைச்சர் லால்காந்த புரூஸ்லி என்றால் நான் மைக்டைசன், அதிகம் கதைத்தால் சுழன்று நிலத்தில் விழுவதற்காக லால்காந்தவின்(அமைச்சர்) முகத்திலேயே குத்துவேன் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே சாமர சம்பத் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்யைில்,

இப்போது 88/89 காலத்தை போன்று சண்டித்தனம் காட்ட முயற்சிக்கின்றனர். நாங்கள் புரூஸ்லி போன்றவர்கள் என்று தங்களை அமைச்சர் லால்காந்த கூறுகின்றார். நீங்கள் புரூஸ்லி என்றால் நான் மைக் டைசன் என்பதனை அவருக்கு கூறிக்கொள்கின்றேன். சுருண்டு நிலத்தில் விழுவதற்கு இரண்டு அடிகள்தான் தருவேன். சாமர சம்பத் அடித்தால் லால் காந்த நிலத்தில் சுழன்று விழுவார். நான் மைக்டைசன் அடிப்பதைப் போன்று முகத்திலேயே குத்துவேன். இதனால், இதனைப் புரிந்துகொண்டு அவர் கதைக்க வேண்டும். இதனை 88/89 உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

மாத்தறை மக்கள் இந்தமுறை தவறிழைத்துள்ளனர். ‘பிக்குச்சன்’ போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி தவறு செய்துவிட்டனர். அந்தத் தவறை மாகாண சபை தேர்தல் மற்றும் அடுத்த பொதுத் தேர்தலில் நிவர்த்தி செய்ய வேண்டும். அதன்போது நான் நாடு முழுவதும் சுற்றி வருவேன். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *