கவிதைகள்

வஞ்சக ஆட்டம் துன்பமே!… கவிதை…. அன்பு ஜெயா

(பா வகை: நாலடியால் அமைந்த இருமுச் சீரிரட்டை வியனிலைச் சிந்து.)

நண்பனின் துன்பத்தைக் – கண்டுமே
நல்லுதவி புரியாதல் துன்பமே;
கண்முன் பகைவர்தம் – செருக்கினைக்
காண்பதும் வாழ்வினில் துன்பமே;
கண்போன்ற உறவுகள் – இன்றியே
காலம் கழித்தலும் துன்பமே;
பண்பினை இழந்துமே – பணயஆட்டம்
பழகுவோன் வாழ்விலும் துன்பமே! (1)

நண்பர்கள் துயர்தனில் – தயங்காது
நாளும் உதவிடல் வேண்டும்;
கண்களால் பகைவரின் – செருக்கினைக்
காணாது விலகிடல் வேண்டும்;
கண்ணான உறவுகள் – நடுவிலே
காலமும் வாழ்ந்திடல் வேண்டும்;
பண்பினைக் காத்து வாழ்வில் – என்றுமே
பணயஆட்டம் தவிர்த்திடல் வேண்டும்! (2)

My Photo
அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *