இலங்கை

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் – ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி தெரிவிப்பு!

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் என்பதால், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டு, நாகதீப விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்புத் தொடர்பில் நாகதீப விகாரையின் விகாராதிபதி ஊடகங்களுக்குக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அந்த விகாரையைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை, அதன் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என தாம் குறிப்பிட்டிருந்தாக நாகதீப விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும் என்றும் எனவே, உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் கூறியதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *