உலகம்

மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது

மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும், வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா இன்று பறிமுதல் செய்துள்ளது.

கரீபியன் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையதாகும்.

மேலும், இந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்தது. இந்த கப்பலை பறிமுதல் செய்ததன் மூலம் அமெரிக்கா பறிமுதல் செய்த வெனிசுலா மற்றும் அந்நாட்டில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடைய கச்சா எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *