உலகம்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில் கனடிய பிரஜை பலி

ஈரானில் நடைபெற்று வரும் பரவலான அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில், ஒரு கனடா குடிமகன் உயிரிழந்துள்ளார். கனடிய வெளி விவகார அமைச்சகம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், கனடாவில் உள்ள உயிரிழந்த நபரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியுரிமை காரணங்களால் அவரது அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகாத நிலையில், ஈரானில் தொடரும் போராட்ட சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு குடிமக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன.
![]()