கவிதைகள்

அவள் வெட்கித்தாள்… கவிதை… முல்லைஅமுதன்

வழமைக்கு மாறாக
உடைகளைத் தெரிவுசெய்ய
முயன்றும் தோற்றுப்போகிறாள்.

எது பிடிக்கும் என தடுமாறித் தடுமாறி
சமையலை முடித்தாள்.

முற்றத்துப்பூக்களைக் கொய்து
சாமிக்குப் பாதியாய் தன் தலைக்குப்
பாதியுமாகத் தந்தாள்.

அம்மா அதிசயமாய் பார்த்துப்
புன்னகைத்துக்கொள்கிறாள்.
என்னாயிற்று?

மழையா பனியா தூறலாய்..
முற்றத்தின் சிலிர்ப்பு…

தயாராய் காத்திருந்தாள்.
யுகங்களும் காத்திருப்பதில்லை..

திடுதிப்பென்று கண்முன்னே நான்…
அவள் வெட்கித்தாள்.

முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *