வடக்கிலிருந்தே தெற்கிற்கு போதைப் பொருட்கள் கடத்தல்; அர்ச்சுனா எம்.பி.கூறுகிறார்

வடக்கு மாகாணத்தில் இருந்தே கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தெற்கிற்கு கொண்டுவரப்படுகின்றன என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டில் பல பிரதேசங்களிலும் சிறுவர்களுக்கான பராமறிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் வடக்கு மாகாண வைத்தியர்கள் தெற்கில் வந்து வேலை செய்து பிரபலமானவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது வடக்கு மாகாணத்தில் இருந்தே கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து தெற்கிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக சிறுவர் பராமறிப்பு நிலையங்களை அமைக்கும் தீர்மானங்களை நான் வரவேற்கின்றேன் என்றார்.
![]()