கவிதைகள்

எதிரும் புதிருமான ஹைக்கூ!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

ஆண்டவனை துதித்தவனுக்கும் சொர்க்கம்
ஆண்டவனை தூற்றியவனுக்கும் சொர்க்கம்
வேறுபாடு மற்றவர் துன்பம்கண்டு தூற்றியது

தீச்சட்டி எடுப்பவர்கள் கடவுளுக்கு செய்வதை
தீ மிதிப்பவர்கள் நம்பிக்கையோடு செய்வதை
தீபம் காட்டுபவர் எதனாலோ செய்வதில்லை

விருந்து புறத்திருக்க தானுண்டல் ஆகாது
பக்தர்கள் புறத்திருக்க தானுண்டல் ஆகுமா
படியளப்பவனுக்கே திரையிடுதல் நியாயமா

வலக்கை கொடுப்பது இடக்கை அறியாதவன்
கொடுத்தவன் எடுத்தவன் இருவரை அறிபவன்
அறியாதவன் மனிதன் அறிந்தவனோ கடவுள்

பிள்ளையார் எப்போதும் முந்தி முதலாகிறார்
அப்போதே பால்குடித்து முதலில் காட்டினார்
இப்பத்தான் முருகன் கண் மூடித்திறக்கிறார்

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *