இலங்கை

தையிட்டி விகாராதிபதியை சந்திக்காத நாகதீப விகாராதிபதி

நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதனொரு கட்டமாக தையிட்டிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டு பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டுச் சென்றார்.

இதேவேளை தையிட்டியில் தற்போதுள்ள அமைக்கப்பட்ட விகாரைக்கு செல்வதையோ விகாரையின் விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரரை சந்திப்பதையோ நயினாதீவு விகாரதிபதி தவிர்த்திருந்தார்.

கட்டம் கட்டமாக காணி விடுவிப்பு தொடர்பாக தற்போது பேசப்படும் நிலையில் நயினாதீவு விகாராதிபதியின் தையிட்டி விஜயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *