பாரதியின் வீணையை மீட்டிய என் விரல்கள்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
சொல்லடி சிவசக்தி – எனை
பகுத்திடும் அறிவொடு படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி – எனை
பகுத்திடும் அறிவொடு படைத்துவிட்டாய்
நல்லருள் தாராயோ
நல்லருள் தாராயோ இந்த
மானிடர் பகுத்திங்கு வாழ்வதற்கே
நல்லருள் தாராயோ இந்த
மானிடர் பகுத்திங்கு வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி – இதைப்
புரிந்துமே வாழ்ந்திட புரிகுவையோ
சொல்லடி சிவசக்தி – இதைப்
புரிந்துமே வாழ்ந்திட புரிகுவையோ
நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
இயற்கையை வணங்கிடல்போல் – வாழ்ந்து
மறைந்தோரை போற்றிட மனம் கேட்டேன்
இயற்கையை வணங்குதல்போல் – வாழ்ந்து
மறைந்தோரை போற்றிட மனம் கேட்டேன்
மறவறு மனங்கேட்டேன் – நடப்பது
வினைப்பயனென அறியும் குணம்கேட்டேன்
மறவறு மனங்கேட்டேன் – நடப்பது
வினைப்பயனென அறியும் குணம்கேட்டேன்
உச்சியில் இடிவீழ்ந்திடினும் – சிவ
சக்தியை நினைந்திடும் குணங்கேட்டேன்
உச்சியில் இடிவீழ்ந்திடினும் – சிவ
சக்தியை நினைந்திடும் குணங்கேட்டேன்
நிலையிலா வாழ்வறிந்தேன் – இதை
சொல்வதில் ஏதேனும் பிழையுள்ளதோ
நிலையிலா வாழ்வறிந்தேன் – இதை
சொல்வதில் ஏதேனும் பிழையுள்ளதோ
நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
நல்லதோர் வீணைசெய்து
அதிலெழும் ஒலிதனை பிழையெனில் பொருளுள்ளதோ
![]()