இந்தியா

இந்தியாவில் கடன் மோசடியில் ஈடுபட்ட மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியன் பிரீமியர் லீக்’ முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை திரும்ப கொண்டு வர, வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா தன் 70வது பிறந்த நாளை சமீபத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.

அதில், விஜய் மல்லையாவும், லலித் மோடியும் ஒன்றாக பங்கேற்றனர்.

இதுதொடர்பாக லலித் மோடி, சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடிய குற்றவாளிகளை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது எனவும் அதற்காக, பல நாடுகளின் அரசுகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதற்கான முயற்சிகளை தாம் தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *