உலகம்

டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையில் இன்று சந்திப்பு!

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில்  நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, இதனை உறுதி செய்துள்ளார்.

அதன்படி, 28 ஆம் திகதி (இன்று) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ட்ரம்பை சந்திக்கிறேன் எனவும் 20 நிபந்தனைகளில் 90 சதவீத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனவும் இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் பிராந்திய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குர்தா பேச்சுவார்த்தையில் டான்பாஸ் மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் , மேலும் பிற பிரச்சினைகளையும் நிச்சயமாக விவாதிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *