இலங்கை

இலங்கையின் கடலோரங்கள் பெரும் பேரழிவின் விளிம்பில் நிற்கின்றன; கடலோர பாதுகாப்பு, கடலோர வள முகாமைத்துவ துறையின் இயக்குநர் நாயகம் எச்சரிக்கை

இலங்கையின் கடலோரங்கள் பெரும் பேரழிவின் விளிம்பில் நிற்கின்றன.காலநிலை மாற்றம், பொறுப்பற்ற அபிவிருத்திகள் மற்றும் பலவீனமான நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்குதலின் கீழ் நாட்டின் உயிர்நாடி வேகமாக அரிக்கப்பட்டு வருகிறது என்று கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ துறையின் (DCC&CRM) இயக்குநர் நாயகம் கலாநிதி டெர்னி பிரதீப் குமார எச்சரித்துள்ளார்.

“இது இனி நாம் புறக்கணிக்க முடியாத சுற்றுச்சூழல் எச்சரிக்கை அல்ல. பெரும் நெருக்கடியின் தாக்கம் ஏற்கனவே எமது கண்களுக்கு முன்பாக வெளிப்படுகிறது,” என்று டாக்டர் குமார த ஐலன்டிடம் கூறினார்.

இலங்கையின் 1,620 கிலோ மீற்றர் கடற்கரையின் சீரழிவானத்து, தாமதமான நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் தேசிய பாதுகாப்புக்கு மீளமுடியாத பெரும் சேதத்தைத் ஏற்படுத்தும் ஒரு நிலையை எட்டியுள்ளது என்றும் எச்சரித்தார்.

துரிதப்படுத்தப்பட்ட பாரிய கடல் அரிப்பு, கடல் மட்டங்களின் உயர்வு, உப்பு நீர் ஊடுருவல்,பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கையான தடைகளின் சரிவுகள் முழு கடலோர சமூகங்களையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்றும் அவர் கூறினார்.

“சதுப்புநிலக் காடுகள் மறைந்து, பாறைகள் அழிக்கப்படும்போது, கிராமங்கள் தங்கள் முதல் பாதுகாப்பு வரிசையை இழக்கின்றன. வெள்ளம், வீடுகள் இழப்பு, மீன்வளம் குறைந்து வருவது மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சி ஆகியவை பின்வருவனவாகும்” என்றும் கூறினார்.

கடற்கரை என்பது வெறும் எல்லை மட்டுமல்ல, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கலாசார அடையாளத்தின் முதுகெலும்பு என்றும் கலாநிதி குமாரா வலியுறுத்தினார்.

“நமது சுற்றுலா சொத்துக்கள், மீன்வளம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கடற்கரையில் குவிந்துள்ளன.

கடற்கரை தோல்வியடைந்தால், பொருளாதாரம் உடனடியாக அதிர்ச்சியை உணரும்,” என்று அவர் எச்சரித்தார்.

ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானங்கள், சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் தூர நோக்கற்ற உள்கட்டமைப்பு திட்டங்களைக் கண்டித்து, குறுகிய கால பொருளாதார நலன்கள் கடற்கரையை சரிவை நோக்கித் தள்ளுகின்றன என்றார்.

“நாம் ஒரு அரிக்கும் கடற்கரையை சரிசெய்து கொண்டே, வேறு இடங்களில் மூன்று புதிய அரிப்பு தளங்களை உருவாக்க முடியாது. அது முகாமைத்துவம் அல்ல – அது அழிவு,” என்று அவர் கூறினார்.

அரசியல் ரீதியாக வசதியான விரைவான திருத்தங்களுக்குப் பதிலாக அறிவியல் சார்ந்த, சுற்றுச்சூழல் சார்ந்த தீர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

துறை அமுலாக்கத்தை தீவிரப்படுத்தி வருவதாகவும், ஒருங்கிணைந்த கடலோர வலய முகாமைத்துவத்தை நோக்கி நகர்வதாகவும் இயக்குநர் நாயகம் கூறினார், ஆனால் சட்டங்கள் மட்டுமே கடற்கரையை காப்பாற்றாது என்று எச்சரித்தார். “இது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு. ஒவ்வொரு சட்டவிரோத கட்டமைப்பும், அழிக்கப்பட்ட ஒவ்வொரு சதுப்பு நிலமும், தீவின் இயற்கை கேடயத்தை பலவீனப்படுத்துகிறது என்பதை கொள்கை வகுப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் புயல்கள் மற்றும் கடல் அலைகளால், அவசர, ஒருங்கிணைந்த தேசிய நடவடிக்கை இல்லாவிட்டால் இலங்கையின் பாதிப்பு மோசமடையும் என்றும் எச்சரித்தார்.

“கடல் இந்த நாட்டின் வரலாற்றை வடிவமைத்து பல நூற்றாண்டுகளாக அதைப் பாதுகாத்து வருகிறது. இன்று நாம் கடற்கரையைப் பாதுகாக்கத் தவறினால், தீவை மெதுவாக விழுங்க அனுமதித்த தலைமுறையாக நாம் நினைவுகூரப்படுவோம்,” என்றும் கலாநிதி குமார மேலும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *