அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஆர்ப்பாட்டங்களுக்கு கொத்து பார்சலுக்கும் பியர் போத்தலுக்கும் அலையும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் காவாலித்தனமாக மாறிவிட்டது என்றும், அந்த பல்கலைக்கழக மாணவர்கள் கொத்து ரொட்டி பார்சலுக்கும் பியர் போத்தலுக்குமென அரசியல்வாதிகளின் பின்னால் சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் யாழ். மாவட்டத்தின் சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,
இதே பல்கலைக்கழக மாணவர்களை நான் ஒரு தடவை சந்தித்தேன். அதன்போது ஏன் நீங்கள் அரசியல்வாதிகளின் பின்னால் போய் நாசமாகின்றீர்கள் என்று கேட்டேன். “கொடி கட்டினால், ஏதாவது ஆர்ப்பாட்டத்தில் குளறி வீடியோ போட்டால் இவர்கள் இரவைக்கு ஒரு கொத்து பார்சலும் பியரும் வாங்கித் தருவார்கள்” என நேரடியாக அவர்களே என்னிடம் சொன்ன விடயமே இது.
“அரசியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் குளறச் சொன்னால் நாங்கள் 20 பேர் வந்து குளறுவோம். இரவைக்கு ஒரு கொத்துக்கும் ஒரு பியருக்கும் காசு போடுவார்கள். அதற்காக இவ்வாறு குளறுவோம்” என்று கூறினர்.
இவ்வாறு கொத்துக்கும் பியருக்கும் குளறுவதால் உங்களின் வரலாறு மாறும். சனம் தெளிவாகவே இருக்கின்றனர். மாணவர்கள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது. உங்களின் தலைவெட்டு, ஸ்டைல்கள் அப்படியிருக்கு உங்களை திருத்தவும் முடியாது. திருத்துவதும் கஸ்டம்.
கெம்பஸுக்கு போகும் உணர்வு இப்போது யாழ்ப்பாணம் கெம்பஸுக்கு போனால் இல்லை. கடையடிக்கு போகும் உணர்வுதான். உங்களின் தலைமயிர் வெட்டு, வாயில் பீடா, சிகரெட் இதுதான் இப்போதைய நிலைமை. உடு புடவையில் இருந்து எல்லாம் காவாலித்தனமாக போயுள்ளது.
ஒரு காலத்தில் வரலாறு படைத்த கெம்பஸ். பல்கலைக்கழத்தை நடத்துபவர்களும் அப்படிதான், வீசிமாரும் அப்படிதான், விரிவுரையாளர்களும் அப்படிதான். தெற்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை சற்று பாருங்கள் என கூறியுள்ளார்.
![]()