யாழ் இளைஞர்களை குறிவைக்கும் இராணுவம்; காலாற்படைக்கு ஆள் திரட்ட விண்ணப்பம் கோரல்!

யாழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுவத்தி இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ காலாற்படையின் 51 ஆவது படைப்பிரிவே குறித்த ஆட்சேர்ப்புக்கான அழைப்பை விடுத்துள்ளது.
19 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகள் இதில் உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப ஊதியமாக அனைத்து படி மற்றும் கொடுப்பனவுகளும் உள்ளடங்கிய வகையில் 80,000 ரூபா வழங்கப்படுவதுடன் விடுமுறைகள் மற்றும் மருத்துவ சிறப்பு உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்து 16 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், நாட்டில் அரச ஊழியர்கள் அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படும் நிலையில், அதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இன்றைய அனுர அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இருக்கும் ஒரு சூழலில், தையிட்டி போன்ற நில ஆக்கிரமிப்புக்கள் தொடரும் காலகட்டத்தில் இராணுவத்துக்கு ஆள்திரட்டும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதானது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()