வேலன்சுவாமிகள் மீதான பொலிஸாரின் அராஜகம்; பேரினவாதத்தையே காட்டுகிறது- சட்டத்தரணி மணிவண்ணன்!

திருகோணமலையில் புத்தர்சிலை வைக்கும் போது அங்கு பெளத்த பிக்குகள் நின்றதால் பொலிஸார் எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால் தையிட்டியில் வேலன்சுவாமிகள் நின்றாதாலோ என்னவோ பொலிஸாரின் அராஜகம் தழைத்தோங்கியுள்ளது. வேலன்சுாமிகள் மீதான பொலிஸாரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று முன்னாள் மாநகரசபை மேயரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஊடக சந்திப்பு இன்று காலை திருநெல்வேலியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெளத்த பிக்கு ஒருவர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லப்படுவாரா? இதனால் தற்போது வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தற்போது தமிழ்க்குடிமகன் அனைத்தும் ஒன்றிணைய தயார் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால் குறித்த விடயம் தொடர்பாக எமக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கப்படவில்லை.
அவ்வாறு அழைப்பு விடுவிக்கப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்திப்பீர் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் வ.மணிவண்ணன் குறிப்பிட்டார்.
![]()