உலகம்

புகை குண்டுகளை வீசி கத்திக்குத்து தாக்குதல் – தைவானில் பலியான உயிர்கள்

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ நிலையத்தில் நேற்று நடந்த புகை குண்டுகள் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் சந்தேகநபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளார்.

சாங் வென் (Chang Wen) என அதிகாரிகளால் பெயரிடப்பட்ட 27 வயது சந்தேக நபர் தாக்குதலுக்கு பிறகு பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் முகமூடி அணிந்து தைபே பிரதான நிலையத்தில் “ஐந்து அல்லது ஆறு புகை குண்டுகளை” வீசியதாக தைவானின் பிரதமர் சோ ஜங்-தாய்(Cho Chung-tae) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பரபரப்பான கடைத்தொகுதி வட்டாரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு விரைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாக பிரதமர் சோ தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவருக்கு ஏற்கெனவே குற்றப் பின்னணி இருந்ததாகவும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சோ சொன்னார்.

மேலும், தைபே பிரதான நிலையத்தில் நடந்த தாக்குதல்கள் “வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *