இலங்கை

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வுக்கு அழுத்தம் கோரி தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!

தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறை அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரவை மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும்  தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு   முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ எங்கரநேசன் -தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்  செ.கஜேந்திரன் -செயலாளர், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி,  த.சுரேஸ் – தேசிய அமைப்பாளர், க.சுகாஷ்  (சிரேஸ்ட சட்டத்தரணி)

உத்தியோகபூர்வ பேச்சாளர்  ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த மனுவைக் கையளித்தனர்.

மேலும் குறித்த சந்திப்பில் தீர்வின்றி நீடித்துவரும் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணவும் வலியுறுத்தியும்  மீனவர் தொடர்பில் தனியான மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு மகஜர்களும் இரண்டும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *