இலங்கை
சமிக்ஞையை மீறி பயணித்த டிப்பர் மீது தர்மபுரம் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து, அனுமதிபத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர், பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிசாரின் சமிக்ஞையை மீறி, உள்ளக வீதியூடாக தப்பிச்செல்ல முற்பட்டவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டிப்பர் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()