இலங்கை

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த எதிர்க்கட்சினர் முயற்சிக்க கூடாது  

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சினர் முயற்சிக்க கூடாது என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

தாய்லாந்து – கம்போடியா முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று களனி ரஜமஹா விகாரையில் நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற ரீதியில் நாம் தற்போது மிக மோசமான இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம்.இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சினர் முயற்சிக்க கூடாது.ஒருசிலர் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்களே தவிர அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை.

தாய்லாந்து – கம்போடியா முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும், அமைதி நிலவ வேண்டும். உலக நாடுகள் இவ்விடயத்தில் அதீத கவனம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இவ்வாறான முரண்பாடுகளினால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *