உலகம்

புதிய ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான் கடற்படை

வான்வழி இலக்குகளை தாக்கியழிக்கக்கூடிய எப்.எம். 90 (என்) ஈ.ஆர் என்ற புதிய ஏவுகணையைப் பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது.

பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலில் இருந்து வான்வழி இலக்குகளை நோக்கி ஏவி இந்த ஏவுகணை நேற்று முன்தினம் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அரபுக் கடலில் இடம்பெற்ற இந்த ஏவுகணை பரீட்சிப்பின் ஊடாக தங்கள் கடற்படையின் போர்த் திறன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சிப்பை உயர் தளபதிகளுடன் அவதானித்த கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அப்துல் முனிப், பாகிஸ்தானின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அனைத்து சூழ்நிலைகளிலும் தேசிய கடல்சார் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் எமது கடற்படையின் பலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *