இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தயார் நிலையில்!; கடுமையான தண்டனை; அதிக அபராதங்கள்

முன்மொழியப்பட்டுள்ள,புதிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டம், இல. 2026” என்ற,இந்தப் புதிய சட்டம் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, இது தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அமுலாகும்.

முன்மொழியப்பட்ட இந்தப் புதிய சட்டமானது, பயங்கரவாதக் குற்றத்தை “வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, பயங்கரவாத நிலையைத் தூண்டும் எந்தவொரு செயலையும் செய்யும் எந்தவொருவரும், பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துவது, இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ, எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்துவது, அல்லது போரை பரப்புவது, அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது, அல்லது இலங்கை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை மீறுவது- பயங்கரவாதக் குற்றத்தைச் செய்வது” என்றும் வரையறுக்கிறது.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாகவோ, பயங்கரவாத வெளியீடுகளை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது பரப்புவதற்காகவோ அல்லது பயிற்சி அளித்ததற்காகவோ குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்படும்.

நியாயமான சந்தேகத்தின் பேரில் எவரையும் ‘நிறுத்தி சோதனையிடவும்’, சந்தேக நபர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு அதிகாரம் உள்ளது என்று 64 பக்க சட்ட மூலம் கூறுகிறது.

ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டவுடன், அத்தகைய கைதுகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவும் சட்டமானது பொலிஸ் மா அதிபருக்கு அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உதவுகிறது.

கைது செய்யப்பட்டதிலிருந்து ஒரு வருடம் வரை பாதுகாப்பு அமைச்சின்(டி.ஒ) அனுமதியை புதுப்பிக்க முடியும் என்று சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *