உலகம்

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்; தீவிரவாதமாக அறிவிப்பு

அவுஸ்ரேலியாவில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒரு தீவிரவாத சம்பவம் என தெரிவித்த சட்னி காவல்துறை ஆணையர் மால் லெனின் காவல்துறையினர் புலனாய்வாளர்களுடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளர்.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி சமூகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்த தீவிரவாத தாக்குதல் சம்பத்துவத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

இதே வேளை போண்ட பாயில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை ஆஸ்திரேலியா முஸ்லிம் சமூகம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது ஆஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில் மற்றும் நியூ சவுத் வெல்ஸ் இமாம்கள் கவுன்சில்கள் தெரிவித்துள்ளன.

இந்த வன்முறை மற்றும் குற்ற செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை பொறுப்பாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் தாக்குதல் தொடர்பில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக உள்ள இஸ்ரேல் தூதரகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது யூத எதிர்ப்பு வன்முறையிலிருந்து மக்களை பாதுகாக்க ஆஸ்திரேலியா அரசு தீர்க்கமாக செயல்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்ததுப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரி ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய மற்றொரு நபர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபர் உள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.

அதேநேரம் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் காயம் அடைந்தவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குகின்றனர்.

இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் என சிட்னி காவல்துறை தெரிவித்துள்ளது.

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி இருந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹணுகாவின் முதல் நாளில் யூத அவுஸ்ரேலியர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நமது தேசத்திற்கு இருண்டு தருணம் என்று பிரதமர் ஆண்டனியால் பெனிசி தெரிவித்துள்ளார்.

யூத ஆஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் ஒவ்வொரு ஆஸ்திரேலியா மீதான தாக்குதலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *