புயல் அபாயம் குறித்து 25 தடவைகள் எச்சரித்தோம்!

வளிமண்டல தாழமுக்க நிலை தொடக்கம் டித்வா சூறாவளி வரையில் அது தொடர்பாக முன்கூட்டியே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்களை வெளியிட்டுள்ளதாகவும், நவம்பர் 23ஆம் திகதி தொடக்கம் 25 தடவைகள் சூறாவளி தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலைமையில் வளிமண்டளவியல் திணைக்களம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்தத் திணைக்களத்தின் வானிலையாளர்கள் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி அனர்த்தங்கள் தொடர்பில் முறையாக முன்னறிவித்தல்கள் விடுக்கப்படவில்லை என்று வளிமண்டளவியல் திணைக்களம் மீது பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், அது தொடர்பில் வானிலையாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இடம்பெற்றுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொய்யான வகையில் தகவல்கள் பரப்பப்பட்டள்ளன. அவ்வாறான பொய்யான தகவல்களால் மக்களுக்காக விடுக்கப்படும் முன்னறிவித்தல்கள் மீதான நம்பிக்கைகளே சீர்குலையும்.
நவம்பர் மாதமென்பது பொதுவாக வளிமண்டளத்தில் தாழமுக்கங்கள் அதிகளவில் ஏற்படும் மாதமாகும். இது தொடர்பில் அவதானங்களை செலுத்தியிருந்த நிலையில் டித்வா சூழறாவளி உரவாகுவதற்கு காரணமாக வளிமண்டல தாழமுக்க நிலைமை அவதானிக்கப்பட்ட அத தொடர்பில் 23ஆம் திகதியளவில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் 25ஆம் திகதியளவில் நாட்டுக்கு அருகில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளமை தொடர்பிலும் பின்னர் அத தொடர்பில் அம்பர் நிற அறிவித்தலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டது.
பின்னர் 25ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் டித்வா சூறாவளி தொடர்பில் சிவப்பு முன்னெச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு அறிவித்தல்களிலும் சூறாவளி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அது வலுவடைந்து பயணிக்கும் பாதை தொடர்பில் முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டு வந்தோம். அதன்போது அதிக மழை வீழ்ச்சி தொடர்பிலம் முன்னறிவித்தல்களை வெளியிட்டு வந்தோம். இவ்வாறான நிலைமையில் அது தொடர்பில் தற்போது பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு வெளியிடப்படும் தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()