இலங்கை

சேதமடைந்துள்ள கண்டாவளைப் பாலம் போக்குவரத்துக்கு இடர்படும் மக்கள்l பார்வையிட்ட ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – பரந்தன் பிரதான வீதியில் (ஏ -35) கண்டாவளை பகுதியில் அமைந்துள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக பலத்த சேதமடைந்து காணப்படுகின்றது.

இதனால் அந்தப் பாலத்தினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் மக்கள் போக்குவரத்துக்கு பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகன் வெள்ளிக்கிழமை (12) அந்த இடத்திற்குச் சென்று, பலத்த சேதமடைந்து காணப்படும் பாலத்தை பார்வையிட்டதுடன் மக்களின் போக்குவரத்துக்காக தற்காலிகமாக மரப் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ள பகுதியையும் அதனுடாகச் சென்று நிலமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *