உலகம்

புதிய அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் உக்ரைன் ; நிலத்தை விட்டுத் தர மறுப்பு

அமரிக்காவின் அமைதி ஒப்பந்த திட்டத்தின்படி ரஷ்யாவுக்கு எந்தப் பகுதியையும் விடுத் தர உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமீர் ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்ததையடுத்து, புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கிவருகிறது.

செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச திட்டம் தற்போது 20 அம்ச திட்டமாக சுருக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவா் கூறினாா்.

அந்த அமைதி திட்டத்தில் பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பது, பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தலைவா்களின் அளவிலேயே பேசி முடிவு செய்யப்படும்.

அதன் அடிப்படையில் புதிய அமைதி திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். இந்தத் திட்டத்தில், ட்ரம்பின் முந்தைய திட்டத்தில் இடம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கு ஆதரவான அம்சங்கள் இடம் பெற்றிருக்காது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்த நாட்டு பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோருடன் நடந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளா்களிடையே ஸெலென்ஸ்கி பேசுகையில், ‘உக்ரைன் சட்டம், அரசியலமைப்பு, சா்வதேச சட்டம், தாா்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிராந்தியத்தையும் ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்று சூளுத்தாா்.

இது, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக டிரம்ப் முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *