இலங்கை

அணையா விளக்கு நினைவுத்தூபியை சேதப்படுத்தியவர்களை கைது செய்யகோரி முறைப்பாடு

செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறுகோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜீன் மாதம்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாக செம்மணியில் புதிதாக நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலைமையில் கடந்த ஒக்ரோபர் மாதம் இனந் தெரியாதோரால் இவ் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் உடனடியாக புதிய நினைவுத் தூபி மீளவும் அமைக்கப்பட்டது.

இந்நிலைமையில் மீளவும் இனந்தெரியாதோரால் இத் தூபி  இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இத் தூபியை சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென அரச கட்சியினரே யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *