உலகம்

போர் நிறுத்தம் ; உக்ரைன் மீது குற்றம் சுமத்தும் டிரம்ப்!

போர் நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2022 இல் தொடங்கிய உக்ரேன், ரஷ்யா முடிவுக்கு வராத நிலையில் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது.

இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் – ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான் என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *