இலங்கை

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையாவிளக்கு நினைவுத்தூபி; தொடரும் விஷமிகளின் அட்டகாசம்

யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ளது.

imageசெம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.

இந்நிலையில், குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு புதிப்பிக்கப்பட்டது.

இந்நிலையில்  மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *