உலகம்

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது.

இந்நிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப், நேற்றுமுன்தினம் இரவு ட்ரோன் ஏவியது.

இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயுத குழுவினர்,முதலில் பாடசாலையை தாக்கியதுடன் பின்னர் பொதுமக்கள் உணவுக்காக உதவி வாங்க கூடியிருந்த இடத்தில் இரண்டாவது தாக்குதலை நடத்தியதாகவும் 50 பேர் இதில் கொல்லப்பட்டனர் எனவும் குழந்தைகள் 33 பேர் உள்ளடங்குவதாகவும் இந்த தாக்குதலுக்கு குறித்த அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை எனவும் சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *