இலங்கை

லம்பெயர் தேசப் பணத்தில் கொழும்பில் அதிசொகுசு மாடி வீட்டிலுள்ள எம்.பி. யாழில் பாதிப்பில்லை என்கிறார்

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கோ இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவோ யாழ்ப்பாணத்திற்கு வராது அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் அதிசொகுசு மாடி வீட்டில் சுகபோகமாக இருக்கும் யாழ் எம்.பி. இயற்கை அனர்த்தத்தினால் யாழ்ப்பாணத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இந்த சபையில் கூறுகின்றார்.இதன் விளைவை அவர் வெகு விரைவில் உணர்வார் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி. யான க. இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க யாழ்ப்பாணத்திற்கு வராது அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு மாடி வீட்டில் ஒரு எம்.பி. சுகபோகமாக இருக்கின்றார். அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றிகளை கூற வேண்டும்.

சாவகச்சேரி வைத்தியசாலை ஊடாக பாராளுமன்றம் வந்தவர் இன்று வரையில் அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. இவ்வாறு செல்லாதவரே யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத் தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்க விளைவுகளை அவர் வெகு விரைவில் உணருவார்.

அதேநேரத்தில் எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே யாழ்ப்பாணத்திற்கு விரைந்து வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட உதவினர். மக்களுக்கு வந்த பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த எம்.பி.யாக இருந்தால் இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். . ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *