இலங்கை

காணாமல்போனவர்களுக்கு புதையுண்ட இடங்களில் ஈமக் கிரியைகள்!

மலையகத்தில் மண் சரிவில் சிக்கி காணமல் போனவர்களை தேடும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில்,சிலர் காணமல்போன தங்கள் குடும்பத்தினர்,உறவினர்கள் இறந்து விட்டதாகக் கருதி,அவர்கள் எங்கு மண் சரிவுகளில் சிக்கி காணமல்போனார்களோ அந்த இடங்களில் அவர்களுக்கான ஈமக் கிரியைகளையும் மதச் சடங்குகளையும் நடாத்தி பிராத்தனைகளில் ஈடுப்பட்டத் தொடங்கியுள்ளனர்.

வெலிமடை – கெப்பட்டிபொல வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணியின் போது மண் மேட்டின் கீழ் புதைந்து ஊழியர் ஒருவர் காணாமல் போயுள்ளார். வெலிமடை-மிரஹவத்தையைச் சேர்ந்த அசித கோசல ரத்நாயக்க என்பவரே இவ்வாறு மண்ணில் புதையுன்டு காணமல் போயுள்ளதாகவும் வீதி அதிகார சபையினர் இவ் வீதியினை கனரக பெக்கோ இயந்திர உதவியுடன் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தேடியும் அவரது உடல் இன்னும் கண்டுடெடுக்காத நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்று, அவருக்கான ஈமக் கிரியைகளையும் மதச் சடங்குகளையும் நடாத்தி பிராத்தனைகளில் ஈடுப்பட்டனர் .

இவர் காணமல்போனமை குறித்து ஆராயுமாறு அவரது உறவினர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *