வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்றத் தயார்; ஈரோஸ் கட்சி கூறுகிறது

வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது அதேவேளை இன்று ஒரு அனர்த்தம் ஏற்பட்டதும் முன்வந்து உதவியது இந்தியா தான். எனவே இந்தியாவுக்கு எதிராக கதைப்பதற்கு எவருக்கும் அருகதை இல்லை என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்கலாம் , தற்போது நல்லதொரு அரசாங்கம் இருப்பதால், உலக நாடுகள் முழுவதும் எமது நாட்டிற்காக உதவ முன்வந்துள்ளது டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது உதவிகளை முன்வந்து வழங்க ஆரம்பித்துவிட்டது.
ஈரோஸ்,வடகிழக்கு உள்ளிட்ட மலையக மக்களின் வறுமையை போக்கியிருக்கின்றது.
செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இந்த மலையக மக்களுக்கு எதனை செய்துள்ளார்கள். 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தை ஊடாக மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்தது கூட ஈரோஸ்தான். இவர்கள் இந்த மக்களுக்கு ஒரு இறாத்தல் பாண் கூட பெற்றுக் கொடுக்கவில்லை.
கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த செந்தில் தொண்டமான் 500 கிலோ கிராம் கஜு சாப்பிட்டுள்ளார். ஒரு கிலோ 6000 ஆயிரம் ரூபா அப்படியானால், ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்து கஜு சாப்பிட்டிருப்பார். இந்த பணத்தில் மலையக மக்களுக்கு பாண் வேண்டி கொடுத்திருக்கலாம்.
ஜனாதிபதி அனுர நல்லதொரு போராளி, நீங்களும் இந்த மலையக மக்களுக்கு துரோகம் செய்யாது. மலையக மக்கள் வாழ முடியாத இடங்களில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் வடகிழக்கில் குடியேற்றலாம் அது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்கலாம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.ஆனால் இதில் இருந்த 16 பேரும் எதை எமது மக்களுக்கு செய்துள்ளார்கள்.
பிள்ளையான், டக்ளஸ் செய்ததை கூட இந்த தமிழ் அரசியல்வாதிகள் எதையும் செய்யவில்லை. அரகலய போராட்டம் நடக்கும் போது நாட்டை பொறுப்பேற்க முன்வந்தவர்கள், இன்று அனுர அரசை இல்லாது செய்ய முயல்கின்றனர். ஆனால் 10 வருடங்களுக்கு அனுர அரசை யாராலும் அசைக்க முடியாது.
புலம்பெயர் சமூகம், மலையக மற்றும் வடகிழக்கு மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால் எமது தொலைபேசி இலக்கமாகிய 0771433317 உடன் தொடர்பு கொண்டு உதவலாம்,
இந்தியா இன்று பாரிய உதவி செய்து வருகிறது. வடக்கு கிழக்கு, மலையக மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம் என்றார்.
![]()