இலங்கை

ரேந்தப்பொல பகுதி மண் சரிவால் 6 கிலோ மீற்றர் கீழே இறங்கியது; 7 உடல்கள் மீட்பு ,வெளிநாட்டவர்களும் சிக்கினர் 

வெலிமடை,ரேந்தப்பொல பகுதி நிலச்சரிவு 6 கிலோ மீற்றர் கீழே இறங்கியுள்ள நிலையில் ஒரே குடுமபத்தை சேர்ந்த 5 பேரின் சடலங்கள் உட்பட 7 பேரின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பெரும் சத்தத்துடன் தொடங்கிய பாரிய மண் சரிவு சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் பெரிய நீரோட்டத்துடன் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களில் ஒரே குடும்பத்தை 5 பேரின் சடலங்கள் உட்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
.நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் பொரகஸ் சந்தியில் ரேந்தபொல அம்பேவலை பாதையில் இரவு 10.45 மணியளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்ட போது வீட்டில் இருந்த 5 பேரும் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த 3 பேரும் மண்ணில் புதையுன்டனர்.

குறித்த பகுதியில்நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை ஆரம்பித்தனர்.இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் சடலங்களும் வர்த்தக நிலையத்தில் புதையுண்டிருந்த இரண்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது.ஒருவரின் சடலம் அதாவது வர்த்தக நிலையத்தில் புதையுண்டவரின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை உட்பட 4 பிள்ளைகளின் சடலங்களும் பாதினாவலை பள்ளிவாசலில் வைக்கப்பட்டன .ஏனைய இருவரின் சடலங்களும் ரேந்தபொல பள்ளிவாசலில் வைக்கப்பட்டன .

இதேவேளை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோ மற்றும் அர்ஜென்ரீனா நாட்டுப் பெண்கள் மூவர் உட்பட சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.மண்சரிவிலிருந்து மீட்கப்பட்டவர்கள் பின்னர் சமரவீரபுர பள்ளிவாசலில் தற்காலிகமாக இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.எந்த காரணம் கொண்டும் குறித்த பாதையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *