இலங்கை

கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் 5 மடங்கு அதிகரிப்பு

நாட்டில் கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் (2022-2024) நிலச்சரிவுகளைத் தவிர, வெள்ளம், பலத்த காற்று போன்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் திட்டத்தை தயாரித்து, அதிக அபாயங்களுக்கு முன்னுரிமை அளித்து பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக, பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் பேரிடர் தணிப்புக்காக பெறப்பட்ட ஒதுக்கீடுகளால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று பேரிடர் மேலாண்மை மையம் தணிக்கைக்கு தெரிவித்துள்ளது.

இந்த தகவல், பேரிடர் மேலாண்மை மையம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம் நிறுவப்பட்டதிலிருந்து (2011-2024) 13 ஆண்டுகளில் பேரிடர் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 3,404.95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *