உலகம்

பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிலிப்பைன்ஸில் வெள்ள தடுப்பு திட்டத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊழலில் தொடர்புடைய உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குத் தொடரக் கோரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதகுருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இடதுசாரிக் குழுக்கள் மணிலாவின் பிரதான பூங்காவில் தனியொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஊழலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மணிலாவில் 17000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைக்காக களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *