இலங்கை

30 பேருடன் சென்ற பஸ் எங்கே போனது?; தொடர்பில்லை, உறவினர்கள் தேடல்

காசல்ட்ரீ பகுதியில் இருந்து கம்பளை நோக்கி திருமண நிகழ்வொன்றிற்கு 30 பேருடன் சென்ற பஸ் தொடர்பில் உறவினர்கள் தேடிவருகின்றனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இறுதியாக புசல்லாவை இரட்டைப் பாதை பகுதியில் இருந்து தொடர்பு கொண்ட போது பஸ்ஸின் இரண்டு பக்கங்களிலும் மண்சரிவு ஏற்பட்டிருந்ததோடு உதவி கோரப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அவர்களது தொலைபேசிகள் இயங்காததால்,அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள்.

இது தொடர்பில் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 759974624,788835980

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *