இலங்கை

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவால் 120 பேர் மாயம்

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவு காரணமாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.

மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுரத்தில் பௌத்த பிரிவெனாவொன்றிலுள்ள 100 இற்கும் அதிகமான பிக்குகள் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *