இலங்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது – அவசரமாக வெளியே மக்களுக்கு அறிவுறுத்தல்

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடுவெல – மாலபே, அதுருகிரிய -மாலபே, மற்றும் மலாபா முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *