இலங்கை

வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி உள்ளிட்ட 40 பயணிகள் மீட்பு!

அநுராதபுரம் – புத்தளம் வீதியிலுள்ள உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்து சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸின் மேல் பகுதியில் வெளிநாட்டு பெண்ணொருவர் உள்ளிட்ட சுமார் 60 பயணிகள் அடங்குவதாக இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பஸ்ஸில் சிக்கிய மற்றவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மீட்கப்பட்ட நபர்கள் நொச்சியாகம பிராந்திய வைத்தியசாலைகளில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *